இராமேஸ்வரம், நவ. 24 –
தமிழகத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிகரிப்பதால் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து இருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ராமேஸ்வரத்தில் பேட்டி.
தமிழகத்தில் போதை பொருள் விற்பனை அதிகரித்ததால் பெண்களுக்கு எதிரான குற்றம், கொலை சம்பவம் அதிகரித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை தந்தார்.
நேற்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்து பின்னர் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவர் கொலை செய்ததால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மாணவி உயிரிழப்பு துயரமான ஒன்று இந்த கொடூர செயலை செய்த நபருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். இது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தங்கச்சிமடம், பாம்பன் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய பெர்மிட் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து மனு அளித்ததால் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பலமுறை வலியுறுத்தியுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் போதை பொருள் விற்பனை அதிகரித்ததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளது. போதை பொருள் விற்பனையை தடுக்க அரசு தவறிவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
மேலும் மாணவி கொலை செய்யப்பட்ட நிகழ்வு வேதனைக்குரிய பெண்கள், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப் பொருள் பயன்பாட்டால் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.



