By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு பணிகள் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு பணிகள் துவக்கம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு பணிகள் துவக்கம்

Last updated: November 1, 2025 8:24 pm
November 1, 2025
44 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 1 –

பகவதி கன்னியாகுமரி அம்மன் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை ஏற்று குமரி மாவட்ட திருக்கோவில்களின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பயனாக சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ரூ.21 கோடியே 95 லட்சம் செலவில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ராஜகோபுரம் கட்டுவதற்கான நிதியை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வழங்கு வதாக உறுதி அளித்துள்ளார்.

இந்தநிலையில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் அமைந்திருக்கும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குட்பட்ட பகுதிக்குள் வருவதால் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் தடையில்லா சான்று மற்றும் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் தடையில்லா சான்று பெறுவதற்கான கன்சல்டண்ட் நிறுவன மாக சென்னையில் உள்ள எக்கோ சர்வீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற என்ற நிறுவனத்துக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வல்லுநர் குழு நேற்று முன்தினம் பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் தடையில்லா சான்று மற்றும் முன் அனுமதி பெறுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த வல்லுநர் குழு கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் கோவிலின் வடக்கு புரதான நுழைவு வாசல் மற்றும் ஏற்கனவே ராஜகோபுரம் கட்டுவதற்காக வேலை தொடங்கி அஸ்திவாரத்தோடு நின்றுபோன இடம் கிழக்கு வாசல், கோவிலின் உள்பிரகாரம், வெளிப்புறம் மற்றும் மேல் தளம் ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட திருக்கோவில்களின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்ட னர். கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதினால் காற்று மாசு, தண்ணீர் மாசு, மண் மாசு, சத்தம் மாசு போன்ற சுற்றுச்சூழல் மாசுக்கள் ஏற்படுமா? என்பது குறித்து விரிவான ஆய்வு அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்குவதற்கான பணியை சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு ஆய்வு கூடத்துக்கு தமிழக இந்து அறநிலையத்துறை வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு ஆய்வுகூட வல்லுனர் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதனால் மாசு ஏற்படுமா? என்பது குறித் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயார் செய்து இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் கடலோர ஒழுங்கு மண்டலத்தின் தடையில்லா சான்று மற்றும் அனுமதி பெற்று ராஜகோபுரம் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்; 2 பேர் காயம்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!
தஞ்சாவூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி; இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யாத்ரு ஆய்வு
அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி

November 12, 2025
46 Views
பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்துக்குபுதிய தேர் பணிகள் தொடக்கம்
வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்க தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு
கோவில்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account