By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்

Last updated: October 23, 2024 10:17 am
October 23, 2024
83 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், சுண்டேகுப்பம், எர்ரஹள்ளி பையூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் நடைபெற்று வரும் கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள் மற்றும் வீடு பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் . கே.எம்.சரயு . அவர்கள் (19.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில் 2010 ஆம் ஆண்டு கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ எட்டு இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டு “குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை எய்திடும் வகையில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 6 வருடங்களில் எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற நோக்கத்துடன், இந்த நிதியாண்டில் 2024-2025 -ல் ஒரு வீட்டிற்கு தலா ரூ.3.50 இலட்சம் என்ற அளவிற்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 74 பயனாளிகளுக்கும், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் 966 பயனாளிகளுக்கும், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 840 பயனாளிகளுக்கும், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 94 பயனாளிகளுக்கும், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் 143 பயனாளிகளுக்கும், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 119 பயனாளிகளுக்கும், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 199 பயனாளிகளுக்கும், தளி ஊராட்சி ஒன்றியத்தில் 172 பயனாளிகளுக்கும், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 588 பயனாளிகளுக்கும் மற்றும் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 886 பயனாளிகள் என மொத்தம் 10 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 4081 பயனாளிகளுக்கு ரூ.142 கோடியே 83 இலட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 74 பயனாளிகளுக்கும், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் 820 பயனாளிகளுக்கும், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 793 பயனாளிகளுக்கும், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 82 பயனாளிகளுக்கும், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் 143 பயனாளிகளுக்கும், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 118 பயனாளிகளுக்கும், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 193 பயனாளிகளுக்கும், தளி ஊராட்சி ஒன்றியத்தில் 164 பயனாளிகளுக்கும், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 560 பயனாளிகளுக்கும் மற்றும் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 880 பயனாளிகள் என மொத்தம் 3,827 பயனாளிகளின் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு குறைந்தபட்ச பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாகவும், அதில் 300 சதுர அடி சிமெண்ட் கான்கிரீட் கூரையால் மூடப்பட்டிருக்கும். மீதமுள்ள 60 சதுர அடி சிமெண்ட் கான்கிரீட் அல்லது பயனாளியின் விருப்பப்படி தீப்பிடிக்காத வகையிலான கூரையாக அமைக்கப்படும். கட்டப்படும் வீட்டின் சுவர்கள் அனைத்தும் செங்கல், ஏசிசி பிளாக் மற்றும் இன்டர் லாக் சிஸ்டம் கொண்ட பொருட்களால் மட்டுமே கட்டாயம் கட்டியிருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஓலை மற்றும் கல்நார் தகடாலான கூரை அமைக்கப்பட மாட்டாது. மலைப்பகுதிகளில் பயனாளியின் விருப்பத்திற்கு ஏற்ப கூரை அமைக்கப்படும். மேலும் இவ்வீடு கட்டுமானப் பணிகளுக்கு ஒரு பயனாளி விருப்பப்பட்டால் அரசு விதிமுறைக்குட்பட்டு அவருக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க சமுதாய முதலீட்டு நிதி (CIF) மூலமாகவோ அல்லது கூட்டுறவு/வணிக வங்கிகள் மூலமாகவே ரூ.50 ஆயிரம் கடனுதவி பெற வழிவகை செய்யப்படும். கட்டுமானப் பணிகளுக்கு தேவையான சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் கணக்கிடப்பட்டு துறை மூலம் பயனாளிகளுக்கு பணியின் நிலைவாரியாக வழங்கப்படும்.

காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம்

கட்டுமான பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேப்போல

காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடுகள் பழுது பார்ப்பு திட்டத்தின் கீழ் 248

வீடுகள் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் சுண்டேகுப்பம் ஊராட்சியில் ரூ. 22 இலட்சம்

மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட கட்டுமான பணிகளை நேரில்

ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க வட்டார

வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட

ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் செய்தியாளர்களிடம்

தெரிவித்தார்.இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் . சுப்பிரமணி, .சரவணன், ஒன்றிய பொறியாளர்கள் . தமிழ்செல்வி, .சௌந்தர்ராஜன், .ஜென்சி, பணி மேற்பார்வையாளர்கள் . அம்பிகா, .கல்பனா, சுண்டேகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் .எல்லம்மாள் சௌந்தரராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி

மக்கள் தொடர்பு அலுவலர் கிருஷ்ணகிரி.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லீட் பிளாட்டினம் அந்தஸ்தை பெற்று சாதனை
பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
வைகை அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

January 23, 2025
47 Views
குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
“நேஷனல் எஜுகேஷனல் பிரில்லியன்ஸ்விருதுகள்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account