திருவெண்ணெய்நல்லூர், அக். 13 –
திருவெண்ணெய்நல்லூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளராக கை.ரா.சடகோபன் நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் மதுரா பல்லரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கை.ரா. சடகோபன். இவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சித்தலிங்கமடம், சி.மெய்யூர், சிறுமதுரை, டி.எடையார், டி.பனப்பாக்கம், டி.கொணலவாடி, அருங்குருக்கை, பெண்ணைவலம், பாவந்தூர், இளந்துறை, எடப்பாளையம் ஆகிய 11 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு திருவெண்ணெய்நல்லூர் மத்திய ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்த புதிய பொறுப்புக்கு பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.கௌதம சிகாமணி ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர். விசுவநாதன் ஆகியோருக்கு கை.ரா. சடகோபன் நன்றி தெரிவித்துள்ளார். புதிய ஒன்றிய செயலாளருக்கு திமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.



