சீர்காழி, அக். 7 –
சீர்காழி வட்டம், அகணி, மன்னன்கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகரன் மனைவி மங்கையர்கரசி (45). இவர் இல்லத்தரசியாகி இருந்து வருகிறார். மன்னன்கோவில் கிராமத்தில் அ/மி மன்னாதசுவாமி, நல்லகாத்தாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இவர்கள் குடும்பத்தினரும் இன்னும் சில குடும்பத்தினர்களும் வசித்து வரும் நிலையில் கடந்த 18/09/2025 அன்று அந்த நிலத்தை விட்டு காலிசெய்து வெளியேறவேண்டும் என மயிலாடுதுறை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆனையர் அலுவலகத்தின் தொடர்புடைய அதிகாரிகளிடம் இருந்து அறிவிப்பு வந்திருந்தது.
இதற்கு காரணம் ஏனாக்குடி வடக்குத் தெருவை சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி (68) ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் என்றும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 22/09/2025 அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்களை நிலத்தை விட்டு வெளியேற்றாமல் எங்கள் வாழ்வாதாரத்தை காத்து எங்களுக்கு வழிசெய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர் பிறகு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை சந்தித்தும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த வீரமணி மனு கொடுத்த பெண்கள் மற்றும் அவருடன் சென்ற ஊர்காரர்கள், அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை 121 பேர் கொண்ட ஸ்ரி நல்லகாத்தாயி அம்மன் வாட்ஸ்அப் குழுவில் கொச்சைப்படுத்தியும், அவதூறாகவும், அவர்களின் தனிபட்ட குடும்ப வாழ்வை சாடியும் பொய்யான அவதூறுசெய்திகளையும் புகைப்படத்துடன் பதிவிட்டு அனைவருக்கும் பகிரவும் என பதிவிட்டுள்ளார்.
இதனால் மன்னன்கோயில் கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்ட பெண்கள், ஊர்காரர்கள் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சீர்காழி காவல்துறை விசாரித்து இருபிரிவுகளின் கீழ் ஏனாக்குடியை சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடிவருகின்றனர். இதனால் துரிதமாக செயல்பட்டு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்ட சப் இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட பெண்களும், கிராமவாசிகளும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.



