நாகர்கோவில், செப்டம்பர் 24 –
கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பு: 2026 ஜூலை, கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் டிஜி டியில் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு கட்டணம் ரூ.200. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கான கருத்தியல் தேர்வு நவம்பர் 4 மற்றும் செய்முறை தேர்வு 5ம் தேதி கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். முழு வழிகாட்டுதல்களை www skilltraning.tn.gov.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இத்தேர்வுக்கு கடந்த 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி அக்டோபர் 8 ஆகும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு நாகர்கோவில் கோணத்தில் உள்ள உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.



