நாகர்கோவில், ஜூன் 19 –
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, அமைச்சகத்தின் மூலம் ஆண்டு தோறும் வீர தீர செயல்கள், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுசூழல் கலை மற்றும் பண்பாடு போன்றவற்றில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2026-ம் ஆண்டிற்கான விருது வேண்டி பதிவு செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் கருத்துருக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரைப்படி அனுப்ப வேண்டிய கால அவகாசம் 31.07.2026 வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் https://awards.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும், பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், 3-வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையும் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் அறிவித்துள்ளார்.



