கொப்பம்பட்டி, செப் 10:
கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈராச்சி–துறையூர் சாலையில் உள்ள தோட்டம் அருகே, காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனை செய்தனர். இதில் 418 கிலோ 464 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விளாத்திகுளத்தைச் சேர்ந்த கண்ணன் (40), குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் (25), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர சிங் (20) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.



