சென்னை, நவ. 17 –
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 28 மாணவர்கள் தொடர்ந்து 20 நிமிடம் யோகா செய்து குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
சென்னை கீழ்கட்டளையில் உள்ள டி.எம்.எஸ்.யோகா அகடாமியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் கீழ்கட்டளை டி.எம்.எஸ்.யோகா அகடாமி மற்றும் வேளச்சேரி டி.எம்.எஸ்.யோகா அகடாமி ஆகியவை இணைந்து யோகாவிற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட உலகளாவிய சாதனைப் பதிவு தளமான குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸில், யோகா உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் 28 மாணவ, மாணவியர்கள் அர்த்த சிரசாசனம் என்ற யோகாவை தொடர்ந்து 20 நிமிடம் செய்து அசத்தினர். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு யோகாசங்களை செய்து அசத்தினர்.
சுமார் 20 நிமிடம் இடைவிடாது யோகா செய்த மாணவர்கள் குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸில் தங்களது சாதனைகளை பதிவு செய்துகொண்டனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸ் நிறுவனர் கணேஷ் சாதனை சான்றிதழ், பதக்கம், கோப்பை வழங்கி பாராட்டினார்.



