கருங்கல், ஜன-20
கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதி சேர்ந்தவர் சசிகுமார் மகள் சாஜினி (15). அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அக்காள், தம்பி இருவரும் மாடியில் உள்ள அறைக்கு பாடம் படிக்க சென்றனர்.
சிறிது கழித்து தம்பி கீழே வந்துள்ளார். மீண்டும் மேலே சென்று பார்த்தபோது அக்காள் சாஜினியை காணவில்லை. சிறுவன் தந்தையுடன் சேர்ந்து தேடியபோது மாடியில் உள்ள மற்றொரு அறையில் ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
உடனடி மாணவியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சாஜினி ஏற்கவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. பள்ளிக்கு வழக்கம்போல் சென்று விட்டு வந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த காரணம் என்ன? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.