தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காதவாறு போர்க்கால கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முள்ளக்காடு உப்பாத்து ஓடை தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் மழைநீர் தேங்காது. மழையில் சேதமான சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுவரை 1200க்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ராஜாராம், நகர் நல அலுவலர் ரங்கநாதன், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் (பொறுப்பு) சூரிய பிரகாஷ், உதவி பொறியாளர் காந்திமதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் வைதேகி, முத்துவேல், முத்துமணி, வெற்றிச்செல்வன், சரவணகுமார், ராஜேந்திரன், முத்து துரை, மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜேஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



