குளச்சல், செப். 19 –
வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி செல்வி (38). இவர் அப்பகுதியில் துணி மற்றும் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவ தினம் செல்வி கடையில் இருந்த போது அங்கு வந்த மிக்கேல் ஆன்றோ ஜெபின் (45) என்பவர் திடீரென கடையில் புகுந்து செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை பிடித்து கடையில் இருந்து வெளியே தள்ளினார். பின்னர் கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து செல்வி வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பெண்ணை வன்கொடுமை செய்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து மிக்கேல் ஆன்றோ ஜெபினை கைது செய்தனர்.


