தஞ்சாவூர், மார்ச் 18 –
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கரந்தை உமாமகேஸ்வரனார் மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் திருவையாறு சட்டசபை தொகுதிக்குட்பட்ட காருக்குடி அன்னை நாராயணி நினைவு உதவி பெறும் தொடக்க ப்பள்ளியில் வாக்குச் சாவடி முன்னேற்பாடு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் வாக்கு சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள், வாக்குப்பதிவு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் தவறாமல் செய்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அவர் பள்ளியக்ரஹாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையான கண்காணிப்பு குழுவின் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக த்தில் வாக்களிக்கும் எந்திரம் கட்டுப்பாட்டு கருவி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசித்தார். இதேபோல் அவர் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பையும் பார்வையிட்டார்.
பின்னர் பொதுமக்களிடம் இருந் து பெறப்படும் புகார்கள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நித்யா,கண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.



