போகலூர், ஆக. 9 –
ரோட்டரி கிளப் ஆஃப் கோரல் சிட்டி ராம்நாட் சார்பில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் பிரிவில் உள்ள 30 பாலூட்டும் தாய்மார்களுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு தாய்மையைப் போற்றுவோம் திட்டத்தின் கீழ் பாலூட்டும் நைட்டிகள் வழங்கப்பெற்றன.
இதில் தலைவர் ரொட்டேரியன் பொறியாளர் மாரி, துணை ஆளுநர் சோமசுந்தரம், உடனடி தலைவர் அன்னபூரணாதேவி, முன்னாள் தலைவர் ராஜேஷ், முன்னாள் செயலாளர் வினோஜ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு நைட்டிகள் வழங்கினர். அரசு மருத்துவர்கள் உடனிருந்தனர்.