கிருஷ்ணகிரி, ஆக. 3 –
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறி கிராமத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் மகேஷ்குமார் மற்றும் இவரது தந்தை முன்னாள் இந்திய இராணுவ வீரரான செல்லப்பா ஆகிய இருவரும் கடந்த மே மாதம் வீட்டில் கொலை செய்து உடலை தூக்கி சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பானுபிரியா மற்றும் அவளது கள்ள காதலன் பூவரசன் ஆகிய இருவரையும் போலிசார் கைத செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மகேஷ்குமாரின் தாயார் காளியம்மாள் மற்றும் உறவினர்கள் கொலை செய்தது மட்டுமின்றி பானுபிரியாவின் உறவினர்கள் எங்களை அடியாள்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இரட்டை கொலை வழக்கை
சி.பி.ஐ, -க்கு மாற்றம் செய்திட வழியுறுத்தி மகேஷ் குமாரின் தாயார் காளியம்மாள் மற்றும்
சகோதரிகள்ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரை சந்தித்து கண்ணீருடன் புகார் மனுவை கொடுத்தனர்.
இதனைத் தொடந்து மகேஷ்குமாரின் உறவினர்கள் கடந்த மே மாதம் எனது அண்ணன் மகேஷ் குமார், மற்றும் எனது தந்தை செல்லப்பா ஆகிய இருவரையும் கொலை செய்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்துள்ளன. இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்ப்புடைய மகேஷ் குமாரின் மனைவி பானுபிரியா மற்றும் அவரது கள்ளக்காலன் பூவரசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
மேலும் இந்த இரட்டை கொலை வழக்கு இன்னும் பலர் சம்மந்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அடிக்கடி எங்களை மிரட்டி வருவதோடு கொலை மிட்டலும் விடுத்து வருகின்றனர். இதனால் எங்களால் வீடடை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ஆகையால் இந்த இரட்டை கொலை வழக்கில் இன்னும் பலர் சம்மந்தப்பட்டுள்ளவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை இதனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இரட்டை கொலை வழக்கில் மேலும் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தினர்.



