By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘முரசு’ புயல் பாதிப்பு: ஆந்திராவில் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > ‘முரசு’ புயல் பாதிப்பு: ஆந்திராவில் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதம்
இநஂதியா

‘முரசு’ புயல் பாதிப்பு: ஆந்திராவில் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதம்

Last updated: November 4, 2026 11:02 am
November 4, 2026
11 Views
Share
SHARE

ஆந்திர மாநிலம், நவ.04.

Contents
15 மாவட்டங்களில் தொடரும் கனமழை10,805 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைப்புமீட்புப் பணிகள் தீவிரம்4,095 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கரையைக் கடந்த ‘முரசு’ புயலால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பாபட்லா, ஓங்கோல், காக்கிநாடா, ஏலூரு, நெல்லூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் என மொத்தம் 30,661 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. ஏராளமான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

15 மாவட்டங்களில் தொடரும் கனமழை

புயல் கரையைக் கடந்த பின்னரும் ஆந்திராவின் 15 மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

10,805 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு

புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 171 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 10,805 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14,810 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் 11 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும், 13 மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன என்றார்.

மீட்புப் பணிகள் தீவிரம்

மேலும், மின்சார வசதிகளைச் சீரமைக்கவும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 613 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதுடன், 185 குழுக்கள் களத்தில் பணியாற்றி வருகின்றன. புயலுக்கு முன்னதாகவே 3,066 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 1,008 இளம் தாய்மார்கள் பாதுகாப்பு கருதி மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டனர். 13 மாவட்டங்களில் 725 மருத்துவக் குழுவினர் மற்றும் 362 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

4,095 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

புயல் குறித்த முன்னெச்சரிக்கைத் தகவல்கள் 3.77 கோடி பேரின் செல்போன்களுக்கு அனுப்பப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார். பாதுகாப்பு நடவடிக்கையாக 4,095 கிராமங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சேதமடைந்த பயிர்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தீ வைத்து எரிப்பு!! இந்திய நாட்டின் இறையாண்மை காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மா.லெ ஆர்ப்பாட்டம்
சத்தீஸ்கரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
12 ஆண்டுகளில் மெட்ரோ கட்டமைப்பு 1,200 கி.மீ. ஆக உயர்வு
ஜிஎஸ்டி வரி நடைமுறைகளில் முக்கிய சீர்திருத்தங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல!!

June 5, 2026
43 Views
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் முன்பு தர்ணா பேராட்டம்
திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டில் 40 லட்சம் மதிப்பீட்டில் பணி துவக்க விழா
100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
பைக் கார் நேருக்கு நேர் மோதல்; மாணவன் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account