இந்தியா,அக் : 09
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி நடைமுறைகளை எளிமையாக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
வரி ஏய்ப்புக்கான குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவான தவறுகளுக்கான அதிகபட்ச அபராதம் ரூ.25,000-லிருந்து ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள் தொழில் நிறுவனங்களின் வரிச்சுமையைக் குறைத்து, தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



