கோவை, ஜூலை 26 –
பொள்ளாச்சி அடுத்துள்ள நல்லாம்பள்ளியைச் சேர்ந்த முத்துச்சாமி அவர்களுடைய மனைவி சந்தியா மனநிலை பாதித்தவர். அவருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையை அருகிலுள்ள அங்கன்வாடியில் சேர்க்காமல் குழந்தையை தூக்கிக் கொண்டு பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, பழனி உள்ளிட்ட பகுதியில் சென்று உணவு சேகரிப்பதும் யாசகம் கேட்பதுமாக இருந்து வந்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறினால் குழந்தையோடு எங்கு தங்குகிறார் என்றே தெரியாது. வெளியில் சென்றால் நீண்ட நாட்களுக்கு வீட்டுக்கு வர மாட்டார்.
இதனை நேரிடைய கண்ட பொள்ளாச்சி சேர்ந்த வழக்கறிஞர்கள் சிவரஞ்சனி மற்றும் இமயவரம்பன் ஆகியோர் குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் நல இலவச தொலைபேசி எண்களான 181 மற்றும் 1098 ஆகிய அலைபேசி எண்களில் தகவல் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அலுவலர்கள் பொள்ளாச்சி ஆனைமலை உள்ளிட்ட பகுதியில் தேடியும் கிடைக்கப் பெறவில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையை மீட்டு உரிய குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை மற்றும் பெண்ணை உரிய காப்பகத்தில் சேர்த்து உரிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பல்வேறு விதமான அடிப்படை வசதிகளை செய்து வருவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியில் நீண்ட காலமாக சுற்றித்திரிந்த மனநிலை பாதித்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த வழக்கறிஞர்கள் சிவரஞ்சனி மற்றும் இமயவரம்பன் மற்றும் சட்ட கல்லூரி மாணவர் முகமது அன்சார் ஆகியோரை அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.