கல்குவாரி வெடி விபத்து எதிரொலி –
மதுரை மாவட்டத்தில் உள்ள குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டவர்களுடன் ஆலோனை கூட்டம் நடத்தினர். மதுரையிலுள்ள கல்குவாரிகளில் வெடி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வறிக்கையை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே கல்குவாரி வெடி மருந்து வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி- மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வெடி மருந்துகள் முறையான அனுமதி பெற்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.



