தருமபுரியில் இந்திய அரசின் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்தின் கீழ் வரும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75- வது ஆண்டு விழாவையோட்டி பேரணி மூத்த புள்ளியில் அதிகாரி மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. புள்ளியியல் அதிகாரி கூறியதாவது. 1950 அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கீழ் சமூக பொருளாதார ஆய்வுகள், குடும்ப நுகர்வு செலவின் கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை பற்றிய தொடர் ஆய்வு, நேர பயன்பாட்டு ஆய்வு, நகர்புற பகுதிகள் ஆய்வு, அமைப்பு சாரா நிறுவனங்கள் பற்றிய வருடாந்திர ஆய்வு, உற்பத்தி துறை வருடாந்திர ஆய்வு, பயிர் புள்ளிவிவர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேளாண் ஆய்வுகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் வெற்றியானது மக்களின் முறையான மற்றும் சரியான தகவல்களை பொறுத்தே சார்ந்துள்ளது என்று தெரிவித்தார்.



