By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குமரி கடற்கரைப் பகுதிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குமரி கடற்கரைப் பகுதிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குமரி கடற்கரைப் பகுதிகள்

Last updated: May 8, 2024 11:21 am
May 8, 2024
121 Views
Share
SHARE

 கன்னியாகுமரி  மே 8 

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் கடல் அலையில் சிக்கி பயிற்சி மருத்துவர் ஐந்து பேர்,  சுற்றுலா பயணி இருவர் மற்றும் ஏழு வயது குழந்தை என மொத்தம் எட்டு பேர் பலியாகி உள்ளனர். இதனால் கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரை  பலப்படுத்தியும், ரோந்து மற்றும் பாதுகாப்பை தீவிர படுத்தியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதன் விளைவாக சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் லெமூர் கடற்கரை, சங்குத்துறை, சொத்தவிளை, முட்டம் கடற்கரை போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக ராட்சத அலைகள் எழும் என்பதால் கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் கடற்கரை கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. வள்ளம் மற்றும் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலையிலேயே கரைக்கு திரும்பி விட்டனா்.இந்நிலையில் ராஜாக்கமங்கலம் லெமூா் கடற்கரையில் திங்கள்கிழமை கடலுக்குள் இறங்கிய பயிற்சி மருத்துவா்கள் 5 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் பேரூராட்சி பணியாளா்களும், மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் போலீஸாரும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனால் நாள்முழுவதும் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்லாமல் தூரத்தில் நின்ற வண்ணம் கடல் அழகை ரசித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது
அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே சாலையில் சாலையில் நடந்து சென்ற கொத்தனார் விபத்தில் சாவு
தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலன் இன்றி உயிரிழப்பு
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா

September 16, 2024
52 Views
திண்டுக்கலில் குடகனாறு அணை ஆய்வு
10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account