சென்னை, ஜூலை 11 –
தாம்பரம் மண்ணிவாக்கம் பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன் கிழமை காலை 10 மணியளவில் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரி கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மாண்பமை சரவணன் பெரியசாமி அவர்கள் தலைமையேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். பெரி கல்விக் குழும தலைமை செயல் அலுவலர் திருமிகு சசி வீரராஜன் மற்றும் பெரி கலை அறிவியல் கல்லூரி கல்வி இயக்குநர் முனைவர் அ. குணசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தனர். பெரி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அ. புருஷோத்தமன் அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் இலக்கியச் சொற்பொழிவாளரும், சர்வதேச தமிழ்ப் பேச்சாளருமான பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதலாம் ஆண்டு மாணவர்கள் எவ்வாறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும், வாழ்க்கையை அழகுபடுத்துவது கல்வி என்ற கருத்துக்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.
முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் தினேஷ் மற்றும் முனைவர் ம. கோகுலநாதன் ஆகியோர் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்வில் பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவில் ஆயிரத்திற்கும் அதிகமான முதலாம் ஆண்டு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.