சென்னை, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் சிக்னல் அருகில்.
எஸ்.எஸ்.ஹைதராபத் பிரியாணியின் 25 வது கிளை திறப்பு விழா எஸ்.எஸ்.ஹைதராபத் பிரியாணி உணவகத்தின் 25 வது கிளையை, புத்தம்புது பொலிவுடன் சென்னை, கோடம்பாக்கத்தில் துவங்கியது, இந்நிறுவனத்தினை நிறுவனர் மற்றும் உரிமையாளர் அப்துல் சமத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, நமது செய்தியாளரிடம் பேசிய அவர்
சென்னையில் இது, எங்களது நிறுவனத்திற்கு 25 வது கிளை ஆகும். திறப்பு விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது.
எங்களது உணவகத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மட்டுமின்றி, எஸ் எஸ்.பக்கெட் பிரியாணி (மட்டன் மற்றும் சிக்கன்), இந்தியன், சைனீஸ், ஸீ ஃபுட் (கடலுணவு வகைகள்), தந்தூரி, பி.பி.க்யூ(BBQ), அரேபியன் கிரில் உள்ளிட்ட உணவு வகைகளும் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் (24×7) கிடைக்கும். எங்களது நிறுவனத்தில் பிரியாணி வகைகள் அனைத்தும் விறகு அடுப்பில் தயாராகிறது என்பது கூடுதல் சிறப்பு.
தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள கோடம்பாக்கம் கிளையில் இரண்டு தளங்களில் டைனிங் (உட்கார்ந்து சாப்பிடும்) வசதியும் உள்ளது. எங்களது உணவு வகைகள் அனைத்தையும் www.sshyderabadbiriyani.com என்ற முகவரியில் ஆன்லைன் வழியாகவும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்.



