புதுக்கடை, ஜூலை 18 –
புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்றோஸ் மற்றும் போலீசார் புதுக்கடை அருகே உள்ள கைசூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தனர். உடனடியாக சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்கள் பாக்கெட்டுக்குள் 60 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் கஞ்சாவை வாகனத்துடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மகன் முகமது முர்சாத் (25), இனயம் புத்தன்துறை பகுதி செய்யதலி மகன் ஹக்கீம் (21) ஆகிய இருவரையும் சார் கைது செய்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


