நாகர்கோவில், டிசம்பர் 8 –
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், திடக்கழிவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், குடிநீர் விநியோக பணியாளர்கள், மீட்டர் ரீடர்கள், பிளம்பர்கள், மின் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க தலைவர் கனகராஜ் தலைமை வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் ஷாஜி, பிரேமலதா, சோனியா, சுடலை, சசிகுமார், சிந்து உட்பட நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தாஸ், மாநில செயலாளர் இந்திரா, மாநில துணைத்தலைவர்கள் தங்க மோகன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட துணை செயலாளர் சகாய ஆண்டனி உட்பட பல பேசினர். முன்னாள் எம்.பி. வெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.


