நாகர்கோவில், ஜூன் 22 –
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் பொன்மணி (51). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நேற்று 21ஆம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அதே நாள் மாலையில் அவர் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்த அவரது நண்பர் பிரபு என்பவர் ஒரு ஆட்டோவில் ஏற்றி பொன்மணியை அவரது வீட்டிற்கு கொண்டு சென்றார். வீட்டுக்கு சென்ற பின்னரும் பொன்மணி அசைவற்ற நிலையில் இருந்ததால் அவரை அவரது மகன் தினேஷ் ஒரு ஆட்டோவில் ஏற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் பொன்மணி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரி என்னை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிக போதையில் மாரடைப்பு ஏற்பட்டு பொன்மணி இருந்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு பொன்மணி எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


