மார்த்தாண்டம், டிச. 9
தக்கலை அருகே பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த தொழிலாளி மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் கைகுட்டையில் மயக்கம் மருந்து தடவி முகத்தில் பிடித்ததில் மாணவி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மாணவி தற்போது கர்ப்பமாகி உள்ளார். இதை அடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


