நாகர்கோவில், ஜூலை 21 –
நாகர்கோவில், கோட்டாறு ரயில்வே சாலையில் டாஸ்மாக் மதுபான கடை மற்றும் அதனை ஒட்டி பார் இயங்கி வருகிறது. வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் மதுக் கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது மதுக்கடை யின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்ட ஊழியர்கள் இது குறித்து உடனடியாக கோட்டாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் மதுக்கடை பாரில் பணம் மற்றும் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்கு வழக்கு பதிவு செய்து தடயவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு பதிவுகள், கைரேகைகளை சேகரித்தனர்.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசரார் சோதனை செய்தபோது அதில் இன்று அதிகாலை நேரத்தில் வாலிபர் ஒருவர் மதுக்கடை பாரின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


