தென்காசி, ஆக. 15 –
இந்தியாவின் 79-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், கணேசன், துணைத் தலைவர் சித்திக், தியாகராஜன், நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரஃபீக், சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் பிரேம்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



