தென்காசி, ஆகஸ்ட் 7 –
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தன்னுடைய சொந்த நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் பாதுகாக்கும் அறையை பக்தர்களின் வசதிக்காக கட்டித் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, செங்கோட்டை முன்னாள் சேர்மன் சட்டநாதன், டி.கே. பாண்டியன், துணைத் தலைவர் சித்திக், தியாகராஜன், நகர பொருளாளர் ஈஸ்வரன், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன், நகர் மன்ற உறுப்பினர்கள் பூமாதேவி, சுப்பிரமணியன், தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செங்கோட்டை ராஜீவ் காந்தி, ராமர், மாரிமுத்து மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.