இலால்குடி, மே 25 –
இலால்குடி கழக மாவட்டம் திராவிடர் கழகம் நடத்தம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.05.2016 ஞாயிற்றுக்கிழமை (ஒருநாள்) கீழவாளாடி பெரியார பெருந்தொண்டர் பெ.சங்கப்பிள்ளை அன்பகத்தில் எழுச்சியோடு தொடங்கியது. இலால்குடி மாவட்ட கழகத் தலைவர் வீ.அன்புராஜா தலைமை ஏற்று உரையாற்றினார்.
மாவட்ட காப்பாளர் ப.ஆல்பர்ட் மாநில இளைஞரணிச் செயலானர் நாத்திகபொன்முடி, மாவட்ட பகுத்தறிவானர் கழக துணைத் தலைவர் பாபு ராஜ், மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட துணை+ செயலாளர் சித்தார்த்தன், இலால்குடி ஒன்றியத் தலைவர் பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் தலைமை ஆசிரியர் மு.செல்வி தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அவனிகோ இளந்திரையன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறை நெறிப்படுத்தியும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எடுத்துக் கூறியும் நோக்க உரையாற்றினார். தொடர்ந்து தந்தை பெரியாரில் வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் ஆசிரியர் மா. அழகிரிசாமி முதல் வகுப்பினை தொடங்கினார்.
பார்ப்பனப் பண்பாட்டுப் படை திராவிடர் கழகம் நேற்று-இன்று – நாளை என்ற தலைப்பில் இரு வகுப்புகளாக முனைவர் துரை.சந்திரசேகரன். அவர்களும் சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் பேராசிரியர் தம்கினிவாசன், தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள் மற்றும் ஹிந்து ஹிந்துத்துவா, சங்பரிவார் ஆர்எஸ்எஸ் என்ற என்ற இரண்டு தலைப்பில் இரண்டு வகுப்பாக சபிரின்சு என்னாரெசு பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியா கி.வீரமணி, அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் வி.சி. வில்வமும் வகுப்பெடுக்கின்றனர்.
நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட பக செயலாளர் இளஞ்சேட் சென்னி, முன்னாள் மாவட்ட தலைவர் சிவசங்கரன் மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் பொ.பெரியசாமி, நகரச் செயலாளர் பாலச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி தலைவர் யுவராஜ், கீழவாளாடி மகளிர் அணி தலைவர் வசந்த ருமாரி, மகளிரணி செயலாளர் வன்னியம்மான், பாடகர் பொற்செழியன் சந்திரசேகரன், மகளிரணி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். பயிற்சிப் பட்டறையில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெருகின்றனர்.



