ஈரோடு, ஜூலை 30 –
டெல்லியில் மாணவர்கள் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய முழுவதும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்கம் – இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களுக்கு வெற்றி விழா ஈரோட்டில் SFI அலுவலகம் முன்பு நடைபெற்றது.
SFI மாவட்ட செயலாளர் த.நவீன் தலைமையில், பாடல்கள் முகமது அப்சர்,கராத்தே கார்த்திகேயன் கலை நிகழ்வுகள் நடைபெற்றது. SFI மாநில செயலாளர் தோழர் சம்சீர் அகமது, SFI முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் P.மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
DYFI மாவட்ட செயலாளர் VA விஸ்வநாதன் கலந்து கொண்டார். ஈரோடு மாவட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தோழர்கள் TNUEF P.P.பழனிச்சாமி, CITU P.சுந்தர்ராஜன், CWFI நடராஜ், TNUEF N.பாலசுப்பிரமணி, AIDWA B.லலிதா ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். நன்றியுரையாக DYFI மாவட்ட பொருளாளர் அன்பு ஜனாதிபதி பேசினார்.



