தருமபுரி, ஏப்ரல் 07 –
தருமபுரி முன்னாள் காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்த M.S. புத்தன் காங்கிரஸில் இருந்து விலகி காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி என்ற புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
அவர் கூறிய அறிக்கையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அறிவித்துள்ள கல்வி கடன், விவசாய பயிர் கடன் ரத்து செய்வது குறித்து தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அறிவிக்க வேண்டும். திமுகவும், அதிமுகவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நகை கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.



