தருமபுரி, அக்டோபர் 9 –
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் தலைநிமிரும் தருமபுரி அகவை 60 என்ற வைரவிழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியரின் பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பேச்சு, கட்டுரை போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் சாந்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.



