சென்னை, ஆகஸ்ட் 23 –
இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு பற்றிய செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஐ.எம்.ஆர்.பி கந்தர் என்ற அமைப்புடன் இணைந்து இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி (ஐ.ஏ.சி ) நடத்திய ஆய்வில் மேலும் பல முக்கிய நுண்ணறிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் நிதிசார் நிலை மற்றும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு எந்த நிலையில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள போதுமான தரவை வழங்கியுள்ளது.
இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியின் (ஐஏசி – லைப் ) இணைத் தலைவர், வெங்கடாசலம் ஐயர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில்
ஆயுள் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு 100 சதவீதம் பேரும் ஏற்கனவே பாலிசி வைத்திருக்காதவர்களில் 70 சதவீதம் பேர் அடுத்த 3–6 மாதங்களுக்குள் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் பேர் சேமிப்புடன் இணைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். 34 சதவீதம் பேர் தற்போது சேமிப்பு அடிப்படையிலான லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டத்தை வைத்துள்ளனர்.
மேலும் இன்ஷூரன்ஸ் வாங்கும் திட்டமுள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இன்ஷூரன்ஸ் வைத்திருப்பவர்கள் மத்தியில் காப்பீட்டுத் திட்டத்தை வாங்க ஊக்கமளிக்கும் முக்கிய காரணிகளாக இருப்பவை குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பு 63 சதவீதம் பேர் மற்றும் குழந்தைகள் எதிர்காலம் பாதுகாப்பில் விருப்பம் உள்ளவர்கள் 48 சதவீதம் பேர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நாட்டின் சராசரியான 55%-ஐ விட அதிகமாகும். மேலும் உத்தரபிரதேசம் (58%), மேற்கு வங்கம் (53%) மற்றும் ஆந்திரா & தெலுங்கானா (26%) போன்ற பிற மாநிலங்களை விட இது அதிகமாகும் என்றார்.



