மயிலாடுதுறை, செப்டம்பர் 1 –
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும் மார்கோனி பவுண்டேசனும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியை மார்கோனி பவுண்டேசன் தலைவர் மார்கோனி திறந்து வைத்தார். சதுரங்க போட்டியில் 5 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் கலந்து கொண்ட 500க்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு பல சுற்று போட்டிகள் நடைபெற்றது. இந்த சதுரங்க போட்டியில் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் சார்பில் செயலாளர் வெற்றிவேந்தன் அவர்களும், போட்டியாளர்களின் பெற்றோர்களும் வந்திருந்து இந்த போட்டியை சிறப்பித்தனர்.



