தஞ்சாவூர், செப்டம்பர் 15 –
தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் சாதனை படைத்த சான்றோர் பெருமக்களுக்கும் தஞ்சாவூர் காவேரி வண்டல் கலை இலக்கிய கூடுகை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காவிரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை கௌரவ தலைவருமான முரசொலி தலைமை தாங்கினார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) மாதவன், காவிரி வண்டல் கலை இலக்கிய கூடுகை தலைவர் ஆசிப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாதனை படைத்த சான்றோர் பெருமக்களா கிய முத்தமிழறிஞர் கலைஞர் விருது சீனிவாசன், தமிழ்வேள் உமாமகேசுவரனார் விருதுபொன்.கோவிந்தராசு,நம்மாழ்வார் விருது சித்தர், கரிகால் சோழன் விருது நிமல் ராகவன், நெல் ஜெயராமன் விருது இராமமூர்த்தி, செவாலியர் சிவாஜி கணேசன் விருது ராம்குமார் ஆகியோரை ருக்கு சிறப்பு செய்து பாராட்டுரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் வழங்கினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 15 நல்லாசிரியர்களை பாராட்டி நெறியாளர் சென்னை தமிழ் இணைய கல்வி கழகம் செந்தலை கௌதமன் பாராட்டி சிறப்புரை யாற்றினார். சாதனையாளர்கள் சார்பில் சீனிவாசன், பாராட்டு பெறும் ஆசிரியர்கள் சார்பில் சுமித்ராவும் ஏற்புரை வழங்கினார்கள். முன்னதாக காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை பொது செயலாளர் யோகம் செழியன் அனைவரையும் வரவேற்றார்.
நிறைவாக ஆலோசனை குழு உறுப்பினர் விசுவநாதன் நன்றி கூறினார்.



