சேலம், ஜூன் 22 –
சேலம் மாநகராட்சி திருமணிமுத்தாறு சேலம் மாவட்ட அறு நூற்று மலை மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகி அயோத்தியாபட்டினம், சேலம் வீரபாண்டி ஒன்றியம் வழியாக சென்று நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர், மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிபாளையம் வழியாக சென்று பரமத்தி வேலூர் வட்டத்தில் நன்செய் இடையார் எனும் இடத்தில் காவிரியில் கலக்கிறது. மேலும் இன்றைய தினம் சேலம் மாநகராட்சி திருமணிமுத்தாறு செல்லும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி இன்றைய தினம் திருமணிமுத்தாறு செல்லும் பாதையான மன்னர் பாளையம், செங்கல் அணை, கோகுல் நகர் பகுதியில் அணை மேடு மற்றும் வெள்ளை குட்டை பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடு குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாநகர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதேபோன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் திருமணிமுத்தாற்றின் பல்வேறு பகுதிகளில் நீரின் தரத்தை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு . சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டார்.



