கன்னியாகுமரி, ஜுலை 17 –
கன்னியாகுமாரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் பணி மாறுதல் பெற்று கோவை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கன்னியாகுமாரி துணை கண்காணிப்பாளராக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்ட மகேஷ் குமார் பணி மாறுதல் பெற்று கோவை சிபிசிஐடி டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார். இவர் பணியின் போது போதைப் பொருட்கள் ஒழிப்பதிலும் சமூக அக்கறையோடு பணியாற்றியவர். குற்றங்கள் ஏற்பட்ட இடத்திற்கு நடு இரவு என்றாலும் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பணி மாறுதல் பெற்றதை அறிந்து பத்திரிகையாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவருடன் தென் குமரி பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் ராஜன் சால்வை அணிவித்து தென்குமரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.