கோவை, அக். 7:
கோவை மரக்கடை பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம், சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் காவலர் அழகர்சாமி உடனிருந்தார்.



