மார்த்தாண்டம், செப். 15 –
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆற்றூர் ஜெயம் நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட துணை செயலாளர் சலாம், மாவட்ட பொருளாளர் சிலவஸ்டர், துணை செயலாளர் அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
அவர் பேசியது: 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. பத்மநாபபுரம் தொகுதியில் 95 சதவீதம் பூத் கமிட்டி முடிக்கப்பட்டது. கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளிலும் 9 பேர் கொண்ட பூத் கமிட்டியின் பணிகள் விரைவில் முடிந்துவிடும். அதன் பிறகு 3 சட்டமன்ற பூத் கமிட்டி நிர்வாகிகளின் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் ஒப்படைக்கப்படும். குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டனி கட்சி வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இதற்காக கட்சி நிர்வாகிகள் முழு வீச்சில் பணியாற்ற தொடங்கி விட்டார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முதலமைச்சரின் கட்டுபாட்டில் இல்லை. அவரது குடும்பத்தினரின் கட்டுபாட்டில்தான் உள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார் களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கு விலை குறைக்கப்படும் என்று அறிவித்தனர். இதுவரைக்கும் குறைக்கவில்லை. இதனால் பெண்கள் தற்போது திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ரெடியாகி விட்டனர்.
மாணவர்களுக்கு கல்வி கல்வி கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்து அவர்களை நம்ப வைத்தனர். ஆனால் இதுவரைக்கும் அது பற்றிய எந்த வித அறிவிப்பும் வரவில்லை. இதனால் மாணவர்கள் இந்த தடவை அதிமுக ஆட்சி வரவேண்டும் என்று அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். டீசலுக்கு மானியம் தரவோம் என்று கூறினார்கள் தந்தார்களா? திமுக ஆட்சி வந்தால் தமிழகத்தில் கட்ட பஞ்சாயத்து இனப்படுகொலை, ரவுடிகளின் அட்டூழியம்தான் அதிகளவில் நடைபெறும். தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. நடுத்தர மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அனைத்து பொருள்களின் விலையை பல மடங்கு உயர்த்திதான் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் சொத்து வரி, வீட்டு வரி, பத்திர பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த 2 ஆண்டுகளில் அனைத்தும் பல மடங்கு உயர்த்தி விட்டார்கள். தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கட்சி பொது பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக பதவி ஏற்பார். கட்சியை விட்டு யார் விலகி சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பது தான் இதில் எந்தவித மாற்று கருத்து இல்லை. மீண்டும் தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன் ஆட்சி அமையும்.
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற அணி செயலாளர் சக்கீர்உசேன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஜாண், மகளிர் அணி செயலாளர் கிளாடிஸ்லில்லி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஷாஜின், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயதாஸ், கிழக்கு ஒன்றிய செயலாளர் நிமால், முன்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், மேல்புறம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஷைன்ஜோஸ், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணி, பத்மநாபபுரம் நகர செயலாளர் டேனியல், பேரூர் செயலாளர்கள் மோகன்குமார், ஜெஸ்டின்ராஜ், விஜுகுமார், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் செந்தமிழ்வாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் குமார், முன்னாள் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பீனாகுமாரி இணை செயலாளர் ரெஞ்சன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் அண்ணா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பிரதீப்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் விஜயசந்திரன், திருவட்டார் பணிமனை அதிமுக செயலாளர் சதீஷ், மகளிர் அணி இணை செயலாளர்கள் பிந்து, ராதிகா, துணை செயலளார் ஜெனிலா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



