நாகர்கோவில், நவ. 21 –
நெல்லை மாவட்டம் முக்கூடல் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). கடந்த 2023ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் முக்கூடல் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று திடீரென நாகர்கோவில் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
நாகர்கோவில் ஜெயிலில் உள்ள அறையில் இருந்த மணிகண்டன் தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த சக கைதிகள் ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மணிகண்டனை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற மணிகண்டன் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு திருட்டு வழக்குகளும் உள்ளது.



