திருமங்கலம், செப். 19 –
திருமங்கலம் அருகே நெடுமதுரையில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையில் திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வேட்டையன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து திமுக அரசின் சாதனைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து கிருத்திகா தங்கபாண்டி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவகாசி த.வனராஜா, திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, நெடுமதுரை பகுதி கிளை செயலாளர்கள் பாலமுருகன், மொக்கை, பன்னீர், மாவட்ட இளைஞர் அணியின் துணை அமைப்பாளர் காளிதாஸ், தொண்டர் மகளிர் அணி அமைப்பாளர் பிரமிளா, மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



