சென்னை, மே 22 –
தென்னிந்தியாவிற்கு டிஷ் டிவி இந்தியா நிறுவனம் மேம்பட்ட சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மலிவான விலையில் தொலைக்காட்சி காணும் தினசரி அனுபவத்தை தடையின்றி வழங்குகிறது.
நுகர்வோரின் மாறிவரும் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப புதிய சலுகையின் கீழ் மாதத்திற்கு ₹149ல் ஆரம்பமாகும் பிராந்திய மொழியை முதன்மையாக கொண்ட பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது. இது தென்னிந்திய நேயர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட சிறப்பு பொழுதுபோக்கு, திரைப்படங்கள், பிராந்திய நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிக்கும் இது பொருந்தும்.
இது குறித்து டிஷ் டிவி இந்தியா நிறுவனத்தின், தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோஜ் தோபல் கூறுகையில், “தென்னிந்தியா எப்போதுமே டிஷ் டிவிக்கு மிக முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. புள்ளி விவர கணக்கின்படி தென்னிந்தியாவில் பிராந்திய மொழி சேனல்களே அதிக தேர்வாயிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு தென்னிந்திய மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவே முக்கியத்துவம் தருகிறோம்.
மேலும் ரீசார்ஜ் செய்வதில் தாமதம், அல்லது தற்காலிக தடைகள் ஏற்பட்டாலும் விளையாட்டுச் சேனல்கள் தொடர்ந்து காணலாம் . மேலும் தமிழ் சேனல்களுடன் கூடுதலாக ஒவ்வொரு தென்னிந்திய மொழி சேனல் தேர்வுக்கும் ₹50 மட்டுமே கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். விளையாட்டுச் சானல்களை எப்போதும் தடையின்றி கண்டுகளிக்கலாம் என்றார்.



