தூத்துக்குடி , அக் : 14
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் பாரதி சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் பொன் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்ரீலஸ்ரீ பெருங்குளம் செங்கோல் ஆதீனம் குரு மகா சன்னிதானம் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து, சிறப்புரைகள் மற்றும் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சங்கப் பொருளாளர் செல்வ கிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்



