நாகர்கோவில், ஆக.27.
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் ஓணம் திருவிழா மற்றும் கலாச்சார சங்கமம் கோலாகலமாக நடைபெற்றது. மருத்துவமனையின் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நிர்வாகத் துறையினர் மற்றும் அனைத்து உதவிப் பணியாளர்களும் உற்சாகமாக பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘உற்சாகம்’, ‘வீரம்’, ‘ரௌத்ரம்’, ‘மேளம்’, ‘விஸ்மயம்’, ‘வியப்பு’ உள்ளிட்ட குழுக்களாகப் பிரிந்து ஊழியர்கள் பாரம்பரிய உடையணிந்து அழகிய அத்தப்பூ கோலங்களை அமைத்தனர். தொடர்ந்து அனைவருக்கும் ஓணசத்யா விருந்து வழங்கப்பட்டது.
பிற்பகலில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை நடைபெற்ற கலாச்சார விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, ஓணம் விழா உற்சாகமாக நிறைவு பெற்றது.



