By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு

Last updated: July 18, 2026 2:18 pm
July 18, 2026
29 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 18 –

குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்; போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக்தாயள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அப்போது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சித்த விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் செத்து மடிவதாக கூறி ஒரு சாக்கு முட்டையில் மனித மண்டை ஓடுகளை எடுத்து வந்தனர்.

அப்போது நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மண்டை ஓட்டுடன் கூட்ட அரங்குக்குள் செல்ல தடை விதித்தனர். இதனால் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மண்டை ஓட்டை வெளியே கொண்டு சென்றனர். பின்னர், திடீரென மண்டை ஓட்டுடன் கூட்ட அரங்குக்குள் ஓடிச்சென்று நுழைய முயன்றனர்.

அப்போது கூட்டரங்க நுழைவுவாயில் கதவை போலீசார் மூடி மண்டை ஓடு எடுத்துச் சென்றவரை துரத்திப் பிடித்தனர். அதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சத்தத்தை கேட்டு ஆட்சியர் அலுவலக முதல் மாடியில் பணியாற்றி வந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் ஆட்சியர் மண்டை ஓட்டுடன் உள்ளே வர அனுமதி மறுத்ததை தொடர்ந்து மண்டை ஓட்டை விவசாயிகள் எடுத்துச் சென்றனர். அதன் பின்னர், அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள், தாங்கள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
“நீங்களும் அப்துல் கலாம் ஆகலாம்” பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி; 60 பேருக்கு ரொக்க பரிசு
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

June 25, 2026
20 Views
கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர்
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவு
சுசீந்திரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account