By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சியில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் 6 பேர் கைது: சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருச்சியில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் 6 பேர் கைது: சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் 6 பேர் கைது: சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு

Last updated: July 8, 2026 12:45 pm
July 8, 2026
8 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 8 –

திருச்​சி​யில் சட்​ட​விரோதப் பணம் பரி​மாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்​சம் பணத்​துடன் கைது செய்​யப்​பட்ட 6 பேருக்​கும் சர்​வ​தேச ஹவாலா கும்​பலுடன் தொடர்பு இருப்​ப​தால், அமலாக்கத்துறை அதி​காரி​கள் விசாரணையை துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சி கேகே நகர் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி, உதவி ஆய்வாளர் செபாஸ்டின் உள்ளிட்ட 17 காவல் அதிகாரிகள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டில் உள்ள ஒரு அறையில் சந்​தேகத்தின் அடிப்​படை​யில் சோதனை நடத்​தினர். அப்போது அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.14.40 லட்​சம் பணம், 150-க்​கும் மேற்​பட்ட ஏடிஎம் கார்​டு​கள், 50 செல்​போன்​கள், சிம் கார்​டு​கள் இருந்தன.

இதுதொடர்​பாக, வீட்​டில் தங்கியிருந்த 6 பேரிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​திய​போது, முன்னுக்குப்​பின் முரணாக பதில் அளித்​துள்​ளனர். இதையடுத்​து, ராமநாத​புரம் தமீம்​அன்​சா​ரி, உத்​திரகோசமங்​கை​ அஜ்மீர் அலி, பழனி​முரு​கன், பிர​வீன், முத்​தமிழ்ச்​செல்​வன், கோடிக்​குளம் ராஜ்கு​மார் ஆகிய 6 பேரை​யும் கைது செய்​து, 2 நாட்​களாக விசா​ரித்தனர். இதில் 6 பேரும் இந்​திய பணத்தை அமெரிக்க டால​ராக மாற்​று​வது, டாலரை இந்​தி​யா​வின் ரூபா​யாக மாற்​று​வது உள்​ளிட்ட சட்​ட ​விரோத பணப் பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்டு வந்​துள்​ளனர். இதற்​காக ரூ.1 லட்​சத்​துக்கு ரூ.6,000 கமிஷன் கிடைத்​துள்​ளது. சிங்​கப்​பூரைச் சேர்ந்த ஒரு​வரின் வங்கி கணக்​குக்கு இவர்​கள் பணத்தை அனுப்பி உள்​ளனர்.

அவர்​களது உறவினர்​கள், நண்​பர்​கள், தெரிந்​தவர்​கள் என சாதாரண நபர்​களை வங்கி கணக்கு தொடங்கச் செய்​து, அவர்​களது ஏடிஎம் கார்​டு​கள் மூலம் இந்த பணப் பரிவர்த்​தனை​களை செய்துள்​ளனர். கைது செய்​யப்​பட்ட 6 பேரும் திருச்சி 2-வது குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜர்​படுத்​தப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இவர்​களுக்கு சர்​வ​தேச அளவி​லான ஹவாலா கும்​பலுடன் தொடர்பு இருப்​ப​து தெரிய​வந்​ததை அடுத்​து, அமலாக்கப் பிரிவு அதி​காரி​கள் விசா​ரணை நடத்தவுள்ளனர்.

கிரிப்டோ கரன்​ஸி, சட்​ட​விரோதப் பணப் பரிவர்த்​தனை, பங்கு வர்த்​தகம் உள்​ளிட்​ட​வற்​றில் ஈடு​பட்​ட​தால் அவர்​களுக்​கும், தீவிர​வாத கும்​பலுக்​கும் தொடர்பு இருக்​கலாம் என்​ப​தால், என்ஐஏ அதி​காரி​கள் இந்த விவ​காரத்தை கூர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமநாதபுரம் பகத் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
கேம்பிரிட்ஜ் கல்வி முறையில் மாணவர்கள் கல்வி தரத்துடன் உடல்நலத்தையும் மேம்படுத்துவதே குறிக்கோள்
போச்சம்பள்ளி அருகே காட்டுக்கொள்ளை கிராமத்தில் விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்: பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி
முசிறி அருகே கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி

November 10, 2024
73 Views
காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
தேனி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி
சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account