மார்த்தாண்டம், ஜூலை 22 –
குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் – அனிஷா தம்பதியினர். மகேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அனிஷா குலசேகரம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
அனிஷா வேலைக்கு செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகர் சங்கர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனுஷா வெளிநாட்டில் வாழும் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரும் தனது மனைவியுடன் நான் வெளியூர் வெளிநாட்டில் இருந்து வந்ததும் பார்த்துக் கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து தவெக பிரமுகர் சங்கர் இளம் பெண்ணுக்கு டார்ச்சர் செய்ததால், “அவன் என்னை வாழ விட மாட்டான். குழந்தையை பார்த்து கொள்ளுங்கள். நான் போகிறேன்” என வெளிநாட்டில் வாழும் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் டார்ச்சர் கொடுத்தவரை குலசேகரம் போலிசார் கைது செய்யாததால் பாதிக்கப்பட்ட மகேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் குலசேகரம் போலீசார் இளம்பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த தவக பிரமுகர் சங்கரை சென்னையில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.



