மார்த்தாண்டம், ஜூன் 16 –
மார்த்தாண்டம் அருகே பொன்மனைவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ் செல்வகுமார் (40). வேன் டிரைவர். சம்பவ தினம் காரவிளை நூலகம் அருகே இவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நல்லூர் பகுதியை சேர்ந்த ஜான் சவுந்தர் சிங் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 3 பேருடன் அங்கு வந்து முன் விரோதம் காரணமாக அரிவாளால் ஜெனிசை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த ஜெனிசை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெனிஸ் செல்வகுமாரின் சகோதரனும் வக்கீலுமான எட்வின் ராஜகுமார் (50) என்பவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஜான் சௌந்தர் சிங் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 3 பேர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


